ஒரு கோடைக்காலத்து வனவாசம்
வீடு வந்தவுடன் iPad தேடும் மகன் இல்லை பனிரெண்டு மணிவரை விளையாட அழைக்கின்ற மகனும் இல்லை காலாற நடை நடந்து காய்கறி வாங்கவும் முக்காலி ஏறி மின்விசிறி துடைக்கவும் அதிகாலை பாக்கட் பால் வாங்கவும் அவசியமில்லை மின்சார பில்லை ஈ பைவ் ஆண்டியும் காஸ் சிலிண்டரை கிருஷ்ணா அம்மாவும் பார்த்துக்கொள்வார்கள் தினமும் ஒரு சினிமா, எட்டு வரை தூக்கம் , தஞ்சாவூர் மெஸ் சாப்பாடு , இரண்டு நாளுக்கொருமுறை பீர், கேள்வி கேட்க ஆளில்லா வாழ்வென இனிமையாய் இருக்கலாம் கோடை அறுநூறு சதுர அடி காலி வீட்டினில் வழி பார்த்து ஏங்கி நிற்கும் புன்னகையும் கழுத்தைக்கட்டியுருளும் குழந்தைகளும் நேற்றுவரை நிறைந்திருந்த முத்தச்சுவையுமின்றி நினைவுகளின் வாசனையில்...