Posts

Showing posts from 2010

அவள்

நதிநீர் இணைப்பு   பாபர்  மசூதி முதிர்ந்த  கிழவியின் தனித்த சோகம் பின்னிரவில்  பெய்யும் பேய் மழை சுவரெங்கும்  கனவுவரையும்   குழந்தையின் தூரிகை எல்லா  கவிதைகளுக்கும்  கிடைத்துவிடுகிறது முதல் வரி உனக்கான காதல் கடிதம் தவிர....

ராவணன்

ஒரு நல்ல படத்த எப்பவுமே தியேட்டர்ல தான்  பாக்கணும். சுமாரான  படத்த  DVD  ல  பாக்கலாம். மொக்க  படத்த உலகத் தொலைக்காட்சிகளில்  முதல்  முறையா  பாக்கலாம். இந்த  ராவணன் படத்த  எதுல பாத்தாலும்  அது  ஒரு  படாத  பாடு. முடியலடா சாமி.  விமர்சனம்  எழுதுனா  நாலு  நல்ல  விஷயம்,  நாலு  நொள்ள விஷயம்  எழுதணும். ராவணனுக்கு எதுவும் வேண்டாம்.  ஒரே  வரி ராவணன்  -  பத்து  தலைகளின்  வலி  உங்கள்  ஒற்றைத்  தலையில். மணியின் ஒற்றைத் தலையால்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு

என்ன மக்களே  எப்படி  இருக்கீங்க? நந்தகுமார்  எழுதாம  போனதால  தமிழ் நாட்டுக்கு  எந்த  இழப்பும்  வந்துடல.  ஆனாலும்  ஏன்டா  எழுதல  ன்னு  கேள்வி  கேக்க நிறைய  பேர்  இருக்காங்களே!  அந்த  அன்பு  நெஞ்சங்களுக்காகவாவது   I  gotta  start  music! சில  நாட்களில்  ராவணன்.! விரைவில் சந்திப்போம்.

நீ

பேருந்துக்கோ புகைவண்டிக்கோ காத்திருக்கும் நிமிஷங்களில் மருத்துமனையில் கையில் டோக்கனுடன் இருமிக்கொண்டிருக்கும் இரவுகளில் தோளில் தலைசாய்த்துறங்கும் பயணியுடன் வயல்வெளிகளை வேடிக்கை பார்க்கும் பொழுதுகளில் நேர்முகத்தேர்வுக்கென தங்கைக்கு வகுப்பெடுக்கும் மொட்டைமாடியில் மகன்களுடன் கைகோர்த்து எதிர்காலம் பேசும் கோயில் பிரகாரங்களில் என எப்போதுமாய் உன் நினைவு

நீ

மின்சாரம் நின்று போன ஒரு ராவேளையில் சந்தித்தேன் உன்னை என் வாழ்வின் மின்சாரமாகிப்போனாய் நீ

ஒரு வழிப்போக்கன் குறிப்புகள்

முன்னூறு பறவைகளுக்கு மேல் கூடு கட்டி இருந்த ஆலமரம் அதிகாலையில் விற்கப்படும் கிராமத்து காய்கறிகள் சுடச்சுட கிடைக்கும் சுக்கு காபி கூடவே மெல்லப்படும் அன்றைய அரசியல் பேருந்தை எதிர் நோக்கும் பள்ளிப்பிள்ளைகள் அண்ணாச்சிக்கடையின் வடை பஜ்ஜி போண்டா தலை இல்லாத அரவான் சிலை. எதுவுமே இல்லை இவ்வேளையில். நீண்டு கிடக்கிறது தங்க நாற்கரம் .

கோவா ஜக்குபாய் மற்றும் ஒரு மொக்கை சைனா படம்

ரெண்டு வெள்ளிக்கிழமை. ரெண்டு ரெண்டரை மணி நேரம். ரெண்டும் வேஸ்ட். நிம்மதியா தூங்கப் போயிருக்கலாம். சென்னை 28 ச ரோ ஜா சூப்பர் படம் பண்ணின டைரக்டர். கட்டாயம் முதல் நாள் போகணும்னு சரவணன் சொன்னான். வீட்ல சண்ட போட்டு, பிளாக்ல டிக்கெட் வாங்கி உள்ள போனா.... குடும்ப பெருமைய எல்லாருமா சேர்ந்து பாடுற ஒரு பாட்டு. அப்புறம் மொக்கையா சில காமெடி. இண்டர்வல் வரைக்கும் பிகினி போட்ட பொம்பள புள்ளைங்க , ஜொள்ளு வுடற ஹீரோங்க. ஒரு gay couple வேற. இண்டர்வல்க்கு அப்புறமும் இதே கதைதான். ஒரே காமெடிக்கு எத்தனவாட்டி சிரிக்கறது? spoof, adult comedy ன்னு எதாவது ஒரு genre முடிவு பண்ணினா அதுல முழுசா நல்லா பண்ணணும். இப்படி பி கா வா எடுத்த மாதிரி படம் பண்ணினா .... என்ன கொடுமை சரவணன் இது? தமிழ்ப்படம் பாக்கப் போறமாதிரி தான் பிளான். ஆனா, வேலூர் ல ராஜா தியேட்டர விட வீனஸ் நல்லா இருக்கும்னு ஜக்குபாய் படம் போனோம். ராஜா தியேட்டருக்கே போயிருக்கலாம் . ஒரே நல்ல விஷயம். welcome back கவுண்டமணி. அப்புறம் tracing shadow ன்னு ஒரு சைனீஸ் படம். fighting scene லாம் நல்லா இருக்கு. மத்தபடி காமெடி எல்லாம் நம்ம கோவா மாதிரி. இந்த வாரம் ---- கொட...

காதல்

எட்டு மார்கழிகள் போயின உனக்கு மணம் கழிந்து பூ வைக்க ஆளில்லை உன் வீட்டு வாசலுக்கும் எனக்கும்

காதல்

அங்கப்ப நாயக்கன் தெரு எங்கள் வீதிக்கு பழைய பெயர் தங்கத் தாமரை வீதி உன் பாதம் பட்டது முதல்.

உழைப்பு

பின்னிரவு இரண்டு மணிக்கு மிளகாய் மூட்டை இறக்கியதில்லை அதிகாலை நாலரை மணிக்கு தேநீர்க்கடை கதவைத் திறந்ததில்லை முழங்காலளவு தண்ணீரில் மூன்று சக்கர வண்டி முழுதுமாய் சமையல் வாயு சுமந்ததில்லை கொதிக்கின்ற கோடையில் நீண்ட தார்ச்சாலைகளில் கறிகாய் விற்றவனில்லை ஏழு மணிவரை தூக்கம் எட்டு மணிக்கு குளியல் ஒன்பது மணிக்கு பங்குச் சந்தையுடன் பலகாரம் பத்து மணிக்கு office பத்தரைக்கு tired ஆ இருக்கு. வாங்க டீ சாப்பிடலாம்.

காதல்

தீராத என் தேடல்களும் ஓயாத என் வார்த்தைகளும் தாளாத தாபமும் தணியாத மோகமும் தேடியலையும் பார்வையும் தீண்டத்துடிக்கும் கரங்களும் நீளும் நேசமும் நினைவுகளிளெல்லாம் நிரம்பி வழிந்திடும் காதலும் உனக்கானவை யல்ல

நினைவுகள்

நீ உன் , என் அம்மா வீட்டுக்கு சென்றிருக்கும் தருணங்களில் , நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தாய் சேய் இணையும் சினிமா காட்சியில் சுஜாதா இறந்த இரண்டாம் நாள் கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டிருந்த அந்தியில் தோழியின் கணவனை அயலாளோடு பார்த்த கணத்தில் நான் நீந்திய காவிரியில் என் மகன் கிரிக்கெட் ஆடிய நண்பகலில் பழைய முதலாளியை ஆட்டோ ஓட்டுனராக சந்தித்த சாலை வளைவில் யாரோ தன் மகளை உன் பேரிட்டு அழைத்த பொன்வேளையில் லேசாய் வழிகிறது கண்ணீர் .

அவள்

காலடித்தடங்களால் நிறைந்த என் வீடு சமைத்த சுவைக்கு அடிமையான என் நா மணத்தை தேடியலையும் என் நாசி ஓசையெல்லாம் இசையாக கோபமெல்லாம் குளிராக காதலெல்லாம் கவிதையாக திரும்பிய திசைகளில் என் பயணம் இருக்கிற இடங்களில் என் இல்லம் நினைக்கின்ற நினைவுகளில் என் நிம்மதி . இப்படியாய் எல்லா வாக்கியங்களுக்கு முன்னும் அவள் நிரம்பிய என் வாழ்வு

ஆயிரத்தில் ஒருவன் - சில பதிவுகள்

ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்த பலவிதமான விமர்சனங்கள் கிடைக்கின்றன. முதல் பாதி அருமை. இரண்டாம் பாதி கொடுமை, சிறப்பான முயற்சி, செல்வா ஒரு மிகச்சிறந்த இயக்குனர். ஜி வி பிரகாஷ் கலக்கி இருக்கிறார். ராம்ஜி தன்னை நிரூபித்து இருக்கிறார். எரம் அலி பின்னி இருக்கிறார். ரீமா வும் ஆண்ட்ரியா வும் ஒரு காட்டு காட்டி இருக்கிறார்கள். பார்த்திபன் சூப்பர். எல்லாம் சரிதான். எல்லாருடைய உழைப்பும் சரிதான். Dream Valley ரவீந்திரனும், டிக்கெட் வாங்கின ரசிகனும் தன் பாவம். இரட்டை அர்த்த டயலாக்கும், ரீமாவின் திறக்கப்பட்ட மேனியும், பழந்தமிழ் வார்த்தைகளும், பாலைவனத்தில் வரும் விரிசடையான் நிழலும் தமிழ் திரையுலகத்தை ஹாலிவுட் க்கு நிகராக்குமா? Bull shit. எந்த படம் ஒரு path breaker என்று ஒரு இயக்குனர் நினைக்கிறாரோ அந்த படத்தை கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு உண்டு. அன்றேல் வேறு படம் அப்படி எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகிவிடும். ரவீந்திரன் போல் வேறு ஒரு நல்லவர் கிடைக்க வேண்டும் இல்லையா. செல்வா இந்த படத்தை செல...