உழைப்பு

பின்னிரவு இரண்டு மணிக்கு

மிளகாய் மூட்டை இறக்கியதில்லை

அதிகாலை நாலரை மணிக்கு

தேநீர்க்கடை கதவைத் திறந்ததில்லை

முழங்காலளவு தண்ணீரில்

மூன்று சக்கர வண்டி முழுதுமாய்

சமையல் வாயு சுமந்ததில்லை

கொதிக்கின்ற கோடையில்

நீண்ட தார்ச்சாலைகளில்

கறிகாய் விற்றவனில்லை

ஏழு மணிவரை தூக்கம்

எட்டு மணிக்கு குளியல்

ஒன்பது மணிக்கு பங்குச் சந்தையுடன் பலகாரம்

பத்து மணிக்கு office

பத்தரைக்கு tired ஆ இருக்கு.

வாங்க டீ சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

நீ இல்லாது

காதல்