நினைவுகள்

நீ
உன், என் அம்மா வீட்டுக்கு சென்றிருக்கும் தருணங்களில்,

நீண்ட நாட்கள் பிரிந்திருந்த தாய் சேய் இணையும்
சினிமா காட்சியில்

சுஜாதா இறந்த இரண்டாம் நாள்
கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டிருந்த அந்தியில்

தோழியின் கணவனை
அயலாளோடு பார்த்த கணத்தில்

நான் நீந்திய காவிரியில்
என் மகன் கிரிக்கெட் ஆடிய நண்பகலில்

பழைய முதலாளியை ஆட்டோ ஓட்டுனராக சந்தித்த
சாலை வளைவில்

யாரோ தன் மகளை உன் பேரிட்டு அழைத்த
பொன்வேளையில்

லேசாய் வழிகிறது கண்ணீர்.

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்