Posts

நீ இல்லாது

பேய்களும் உறங்கும் பின்னிரவிலும் விழித்திருக்கிறேன் நான் கண்ணீரின் உப்புக்கரை படிந்த அலைபேசித் திரையை துடைத்தபடி ... நீங்கா உன் நினைவுகள் நீட்டிக்கொண்டே போகின்றன என் இரவுகளை... ஒவ்வொரு பாடலிலும் உனக்காய் ஒரு வரி ஒவ்வொரு அறையிலும் எனக்கான உன் வாசனை ஒவ்வொரு நிமிடமும் உனக்கான ஒரு எண்ணம் விழியோடு விழி தொட விரலோடு விரல் தொட அருகிலாது பிரித்தபடி சிரிக்கிறது காலம் பிரியமாய் புன்னகைக்கும் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே காலத்தை கடக்கிறது நம் காதல் 

அருகிருந்தும் தொலைவிலாய்.....!

நினைவுகளைத்தவிர  வேறு என்னவுண்டு  இவ்வாழ்வில் ? விரலிடுக்கில் பென்சில் வைத்து நசுக்கிய வரலாற்று  ஆசிரியருக்கு கம்மாடிட்டி ட்ரேடிங் சொல்லிக்கொடுத்த  நாள் நினைவிலுண்டு தேனீர் வாங்கிக் கொடுக்க தயங்கி  நின்ற நா.செழியன் என்  வீட்டு  வங்கிக்கடனுக்கு உத்தரவாதம்  கொடுத்த  பொழுது நினைவிலுண்டு அருணா பேருந்துக்காய்  காத்திருந்து வகுப்பரைகளைத்  தவிரவிட்ட வியாழன்களும்  வெள்ளிகளும் வாரம்முழுதும் நினைவிலுண்டு வாழும்  வாழ்க்கையென  ஒன்றும் வாழ  வேண்டிய  வாழ்க்கையென  ஒன்றும் வார்த்தை  தவறிய வாழ்க்கையென ஒன்றும் வாழ  நினைக்கும்  வாழ்க்கையென  ஒன்றுமாய் வாழ்க்கைகளும் நினைவிலுண்டு நினவுகளெல்லாம்  நீயே  என்றான  பின் நீ  அருகிருந்தால்தான்  நிம்மதி தொட்டு  விடும்  தூரத்தில்  நீ தொடர்பு  கொள்ளும்  ஆவலில்  நான். காலத்தின்  கணக்குகள்  வேறானாலும் காதலின்  கணக்குகள்  வேறல்ல...! கையருகில்   வா....! ...

ஒரு கோடைக்காலத்து வனவாசம்

வீடு வந்தவுடன் iPad  தேடும் மகன் இல்லை  பனிரெண்டு மணிவரை  விளையாட அழைக்கின்ற மகனும் இல்லை காலாற நடை நடந்து காய்கறி வாங்கவும்  முக்காலி ஏறி மின்விசிறி துடைக்கவும்  அதிகாலை பாக்கட் பால் வாங்கவும் அவசியமில்லை  மின்சார பில்லை  ஈ பைவ் ஆண்டியும்  காஸ் சிலிண்டரை  கிருஷ்ணா அம்மாவும்  பார்த்துக்கொள்வார்கள்  தினமும் ஒரு சினிமா, எட்டு வரை தூக்கம் , தஞ்சாவூர் மெஸ் சாப்பாடு , இரண்டு நாளுக்கொருமுறை பீர்,  கேள்வி கேட்க ஆளில்லா வாழ்வென  இனிமையாய் இருக்கலாம் கோடை  அறுநூறு சதுர அடி காலி வீட்டினில்  வழி பார்த்து ஏங்கி நிற்கும் புன்னகையும்  கழுத்தைக்கட்டியுருளும் குழந்தைகளும்  நேற்றுவரை நிறைந்திருந்த முத்தச்சுவையுமின்றி நினைவுகளின் வாசனையில்...

அழகி

உடலின் அழகெல்லாம் அழியக்கூடியதுதான் சுருள்சுருளாய்  நீண்டிட்ட கேசமெல்லாம் உதிர்ந்திடும் குழிவிழச்  சிரித்த கன்னத்தோல்  சுருங்கிடும் இறுக்கி  அணைத்திருந்த இருகரங்கள்  தளர்ந்திடும் கட்டிலின் கால்கள் முறித்த காமமது  களைத்திடும். வளைந்தோடும் நதிக்கரையில், மாலைப்பூச்சொரியும்  மரத்தடியில், தோசை கருகவிட்ட அடுப்படியில், நான்கு நாட்கள் தங்கியிருந்த மருத்துவ அறையில், தந்தையை இழந்தபின் திரும்பிய நீண்ட ரயில் பயணத்தில்.... தோழியாய்  நீ  இருந்த  அழகு ஒருபோதும்  குறைவதில்லை...

நாகவள்ளி

Image
சந்திரமுகி  2  படத்தில்  நடிக்க  பி.வாசு  ரஜினிகாந்த்-ஐ  கேட்ட போது  ரஜினி  என்ன  சொன்னார்?  "என்னை விட,  அஜீத்  நடித்தால்  Super-ஆ  இருக்கும்.  வேட்டையன்  charector-க்கு  அஜீத்  தான்  சரியான  சாய்ஸ்".  அஜீத்  மேல  அப்படி  என்ன  கோபம்  ரஜினி  உங்களுக்கு?  உங்க  ரசிகன்-ங்கறத   தவிர   அஜீத்  என்ன  தப்பு  பண்ணினார்?  தல.....  தப்பிச்சே   நீ...! நந்தா...    சிக்கிட்டேடா   நீ.    சிக்கிட்டே... சந்திரமுகி,   சந்திரமுகி  2   என்ன   வித்தியாசம்?  2  மொக்கை  படம்.  அதான்.... என்னோட  விமர்சங்கள்ள   நான்  கதை  என்ன,  screenplay  என்ன  இதெல்லாம்  எப்போவுமே  சொல்றதில்ல.  அது  தியேட்டர்  போய்,  திருட்டு  VCD  வாங்கி  பாக்கறவங்களோட  த...

அது ஒரு நிலாக்காலம்

மழையில்  கரைந்துவிடுவேன்  என பயந்து  அம்மாவின்  முந்தியில்  ஒளிந்தது முதலாம்  வகுப்பில். ஆங்கிலம்  எழுதத்தெரியாமல் india  spelling  அப்பாவிடம்  கேட்டு indira  என  சிலேட்டில் எழுதியது நான்காம்  வகுப்பில் அரை  ட்ரவுசர்  போட  அசிங்கப்பட்டு அண்ணன்களிடம்   பழைய  பேன்ட்  கேட்டு வெட்கப்பட்டுத்  திரிந்தது எட்டாம்  வகுப்பில். மாநில  விளையாட்டுப்  போட்டிகளில் மனதை  வென்ற  ஒருத்தி அண்ணா  என்றழைத்தது பனிரண்டாம்  வகுப்பில் பசுமை  நிறைந்த  நினைவுகள் எப்போதுமுண்டு படித்தது  எதுவும்  மனதிலில்லை

மன் மதன் அம்பு

Image
ஹாய்  மக்களே!   எப்படி  இருக்கீங்க...? நடுவுல  ரொம்ப  வேலை  இருந்ததால  இந்த  பக்கமே  பாக்கல. இந்த  வருஷம் 2011 ல  மாசத்துக்கு  குறைந்த பட்சம்  10  முறையாவது  எழுதணும்.  பாக்கலாம். இப்போ  மன் மதன் அம்பு..... இந்த  PHOTO  ரொம்ப  நல்லா இருக்குல்ல...  இத  மட்டும்  நம்பி  தியேட்டர்  பக்கம்  போகக்கூடாது.  டிரைலர்  எப்போவுமே  நல்லா  தான்  இருக்கும். தண்ட  விராஜித  மந்த  கதி  --  ன்னு  சொல்லுவாங்க  சமஸ்கிருதத்துல.  யானை  நடக்கிற மாதிரி  மெதுவான  நடை.  கமல் ங்கிற  யானை  தூங்கிகிட்டே  நடந்த  மாதிரியான  படம்  இது.  மனிதன்  எப்போவுமே  ஞாபகங்களால்  ஆனவன்.  ஒரு  சிவப்பு  கலர்  paint ஐ  பாத்தாலே,  சிவப்பு  கலர்  வீடு,  நம்ம ஆளோட  சிவப்பு  சுடி,  எப்போ  சின்ன  ...