அழகி
உடலின் அழகெல்லாம்
அழியக்கூடியதுதான்
சுருள்சுருளாய் நீண்டிட்ட
கேசமெல்லாம் உதிர்ந்திடும்
குழிவிழச் சிரித்த
கன்னத்தோல் சுருங்கிடும்
இறுக்கி அணைத்திருந்த
இருகரங்கள் தளர்ந்திடும்
கட்டிலின் கால்கள் முறித்த
காமமது களைத்திடும்.
வளைந்தோடும் நதிக்கரையில்,
மாலைப்பூச்சொரியும் மரத்தடியில்,
தோசை கருகவிட்ட அடுப்படியில்,
நான்கு நாட்கள் தங்கியிருந்த மருத்துவ அறையில்,
தந்தையை இழந்தபின் திரும்பிய நீண்ட ரயில் பயணத்தில்....
தோழியாய் நீ இருந்த அழகு
ஒருபோதும் குறைவதில்லை...
அழியக்கூடியதுதான்
சுருள்சுருளாய் நீண்டிட்ட
கேசமெல்லாம் உதிர்ந்திடும்
குழிவிழச் சிரித்த
கன்னத்தோல் சுருங்கிடும்
இறுக்கி அணைத்திருந்த
இருகரங்கள் தளர்ந்திடும்
கட்டிலின் கால்கள் முறித்த
காமமது களைத்திடும்.
வளைந்தோடும் நதிக்கரையில்,
மாலைப்பூச்சொரியும் மரத்தடியில்,
தோசை கருகவிட்ட அடுப்படியில்,
நான்கு நாட்கள் தங்கியிருந்த மருத்துவ அறையில்,
தந்தையை இழந்தபின் திரும்பிய நீண்ட ரயில் பயணத்தில்....
தோழியாய் நீ இருந்த அழகு
ஒருபோதும் குறைவதில்லை...
Comments
Post a Comment