மன் மதன் அம்பு

ஹாய்  மக்களே!   எப்படி  இருக்கீங்க...?

நடுவுல  ரொம்ப  வேலை  இருந்ததால  இந்த  பக்கமே  பாக்கல. இந்த  வருஷம் 2011 ல  மாசத்துக்கு  குறைந்த பட்சம்  10  முறையாவது  எழுதணும்.  பாக்கலாம்.

இப்போ  மன் மதன் அம்பு.....

இந்த  PHOTO  ரொம்ப  நல்லா இருக்குல்ல...  இத  மட்டும்  நம்பி  தியேட்டர்  பக்கம்  போகக்கூடாது.  டிரைலர்  எப்போவுமே  நல்லா  தான்  இருக்கும்.

தண்ட  விராஜித  மந்த  கதி  --  ன்னு  சொல்லுவாங்க  சமஸ்கிருதத்துல.  யானை  நடக்கிற மாதிரி  மெதுவான  நடை.  கமல் ங்கிற  யானை  தூங்கிகிட்டே  நடந்த  மாதிரியான  படம்  இது.  மனிதன்  எப்போவுமே  ஞாபகங்களால்  ஆனவன்.  ஒரு  சிவப்பு  கலர்  paint ஐ  பாத்தாலே,  சிவப்பு  கலர்  வீடு,  நம்ம ஆளோட  சிவப்பு  சுடி,  எப்போ  சின்ன  வயசுல  சைக்கிள்ள  இருந்து  விழுந்து  அடி பட்டு  சிந்துன  முழங்கால்  ரத்தம்னு  ஆயிரம்  சிவப்பு  ஞாபகம்  வரும்.   கமலோட  காமெடி  படம்  பாக்க  போகும்  போது,  மைக்கேல் மதன,  சதி லீலாவதி,  பஞ்ச தந்திரம்,  PKS  ஞாபகம்  இல்லாம  போறதுக்கு  நான்  என்ன  முற்றும்  துறந்த  முனிவனா?  இல்ல  சஞ்சய்  ராமசாமியா?

ஒரே  ஒரு  சின்ன  twist  இண்டர்வல்  எபெக்ட்-க்காக,  கொஞ்சம்  கொஞ்சம்  ஜோக்ஸ்,  சூப்பர்  லண்ட்ச்காபெஸ்  பிளஸ்  ஒரு  மொக்கை  ஸ்க்ரீன்பிளேவோட  வந்துருக்குற  மொக்கை  பிலிம்.

எல்லாரும்  நல்லா  நடிச்சிருக்காங்க.   மாதவன்  optimum  செலக்க்ஷன்.  சங்கீதா  குட்  வொர்க்.  த்ரிஷா  குரல்  ச்சோ  ச்ச்வீட்.  தொடரலாம்.  கமல்   fantastic.  "நான்  எப்படி  நடிக்கிறேன்  பாரு....  பாரு....." ன்னு   கேமராவ  பாத்து சொல்லாம    நிஜமாவே  நல்லா  நடிச்சிருக்கார்.  well  done  kamal.  நீல வானம்  பாட்டு  மட்டும்  உச்சி   வெய்யில்ல  கிடைச்ச  ஐஸ்  மோர். 

ஆனா,  ரொம்ப  ஸ்லோ   மூவி.  கடைசி   வரை  Grip-ஏ  இல்ல.

வேகம்   குறைவானதால  இலக்குக்கு   முன்னாடியே   விழுந்துடும்  இந்த  அம்பு.

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்