ஒரு வழிப்போக்கன் குறிப்புகள்

முன்னூறு பறவைகளுக்கு மேல்
கூடு கட்டி இருந்த ஆலமரம்


அதிகாலையில் விற்கப்படும்
கிராமத்து காய்கறிகள்


சுடச்சுட கிடைக்கும் சுக்கு காபி


கூடவே மெல்லப்படும் அன்றைய அரசியல்


பேருந்தை எதிர் நோக்கும் பள்ளிப்பிள்ளைகள்


அண்ணாச்சிக்கடையின் வடை பஜ்ஜி போண்டா


தலை இல்லாத அரவான் சிலை.


எதுவுமே இல்லை இவ்வேளையில்.


நீண்டு கிடக்கிறது தங்க நாற்கரம்.

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்