நீ
பேருந்துக்கோ புகைவண்டிக்கோ
காத்திருக்கும் நிமிஷங்களில்
மருத்துமனையில் கையில் டோக்கனுடன்
இருமிக்கொண்டிருக்கும் இரவுகளில்
தோளில் தலைசாய்த்துறங்கும் பயணியுடன்
வயல்வெளிகளை வேடிக்கை பார்க்கும் பொழுதுகளில்
நேர்முகத்தேர்வுக்கென
தங்கைக்கு வகுப்பெடுக்கும் மொட்டைமாடியில்
மகன்களுடன் கைகோர்த்து
எதிர்காலம் பேசும் கோயில் பிரகாரங்களில்
என
எப்போதுமாய் உன் நினைவு
காத்திருக்கும் நிமிஷங்களில்
மருத்துமனையில் கையில் டோக்கனுடன்
இருமிக்கொண்டிருக்கும் இரவுகளில்
தோளில் தலைசாய்த்துறங்கும் பயணியுடன்
வயல்வெளிகளை வேடிக்கை பார்க்கும் பொழுதுகளில்
நேர்முகத்தேர்வுக்கென
தங்கைக்கு வகுப்பெடுக்கும் மொட்டைமாடியில்
மகன்களுடன் கைகோர்த்து
எதிர்காலம் பேசும் கோயில் பிரகாரங்களில்
என
எப்போதுமாய் உன் நினைவு
Comments
Post a Comment