கோவா ஜக்குபாய் மற்றும் ஒரு மொக்கை சைனா படம்

ரெண்டு வெள்ளிக்கிழமை. ரெண்டு ரெண்டரை மணி நேரம். ரெண்டும் வேஸ்ட்.
நிம்மதியா தூங்கப் போயிருக்கலாம்.

சென்னை 28 ச ரோ ஜா சூப்பர் படம் பண்ணின டைரக்டர். கட்டாயம் முதல் நாள் போகணும்னு சரவணன் சொன்னான். வீட்ல சண்ட போட்டு, பிளாக்ல டிக்கெட் வாங்கி உள்ள போனா....

குடும்ப பெருமைய எல்லாருமா சேர்ந்து பாடுற ஒரு பாட்டு. அப்புறம் மொக்கையா சில காமெடி. இண்டர்வல் வரைக்கும் பிகினி போட்ட பொம்பள புள்ளைங்க , ஜொள்ளு வுடற ஹீரோங்க. ஒரு gay couple வேற. இண்டர்வல்க்கு அப்புறமும் இதே கதைதான். ஒரே காமெடிக்கு எத்தனவாட்டி சிரிக்கறது?

spoof, adult comedy ன்னு எதாவது ஒரு genre முடிவு பண்ணினா அதுல முழுசா நல்லா பண்ணணும். இப்படி பி கா வா எடுத்த மாதிரி படம் பண்ணினா .... என்ன கொடுமை சரவணன் இது?

தமிழ்ப்படம் பாக்கப் போறமாதிரி தான் பிளான். ஆனா, வேலூர் ல ராஜா தியேட்டர விட வீனஸ் நல்லா இருக்கும்னு ஜக்குபாய் படம் போனோம். ராஜா தியேட்டருக்கே போயிருக்கலாம். ஒரே நல்ல விஷயம். welcome back கவுண்டமணி.

அப்புறம் tracing shadow ன்னு ஒரு சைனீஸ் படம். fighting scene லாம் நல்லா இருக்கு. மத்தபடி காமெடி எல்லாம் நம்ம கோவா மாதிரி.

இந்த வாரம் ---- கொடுமை வாரம்.

அடுத்தது அசல். (நந்தா, நல்லா யோசிப்பா!!)

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்