அது ஒரு நிலாக்காலம்

மழையில்  கரைந்துவிடுவேன்  என
பயந்து  அம்மாவின்  முந்தியில்  ஒளிந்தது
முதலாம்  வகுப்பில்.

ஆங்கிலம்  எழுதத்தெரியாமல்
india  spelling  அப்பாவிடம்  கேட்டு
indira  என  சிலேட்டில் எழுதியது
நான்காம்  வகுப்பில்

அரை  ட்ரவுசர்  போட  அசிங்கப்பட்டு
அண்ணன்களிடம்   பழைய  பேன்ட்  கேட்டு
வெட்கப்பட்டுத்  திரிந்தது
எட்டாம்  வகுப்பில்.

மாநில  விளையாட்டுப்  போட்டிகளில்
மனதை  வென்ற  ஒருத்தி
அண்ணா  என்றழைத்தது
பனிரண்டாம்  வகுப்பில்

பசுமை  நிறைந்த  நினைவுகள்
எப்போதுமுண்டு
படித்தது  எதுவும்  மனதிலில்லை

Comments

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்