அருகிருந்தும் தொலைவிலாய்.....!

நினைவுகளைத்தவிர  வேறு
என்னவுண்டு  இவ்வாழ்வில் ?

விரலிடுக்கில் பென்சில் வைத்து நசுக்கிய
வரலாற்று  ஆசிரியருக்கு
கம்மாடிட்டி ட்ரேடிங் சொல்லிக்கொடுத்த  நாள்
நினைவிலுண்டு

தேனீர் வாங்கிக் கொடுக்க
தயங்கி  நின்ற நா.செழியன்
என்  வீட்டு  வங்கிக்கடனுக்கு
உத்தரவாதம்  கொடுத்த  பொழுது
நினைவிலுண்டு

அருணா பேருந்துக்காய்  காத்திருந்து
வகுப்பரைகளைத்  தவிரவிட்ட
வியாழன்களும்  வெள்ளிகளும்
வாரம்முழுதும்
நினைவிலுண்டு

வாழும்  வாழ்க்கையென  ஒன்றும்
வாழ  வேண்டிய  வாழ்க்கையென  ஒன்றும்
வார்த்தை  தவறிய வாழ்க்கையென ஒன்றும்
வாழ  நினைக்கும்  வாழ்க்கையென  ஒன்றுமாய்
வாழ்க்கைகளும்
நினைவிலுண்டு

நினவுகளெல்லாம்  நீயே  என்றான  பின்
நீ  அருகிருந்தால்தான்  நிம்மதி

தொட்டு  விடும்  தூரத்தில்  நீ
தொடர்பு  கொள்ளும்  ஆவலில்  நான்.

காலத்தின்  கணக்குகள்  வேறானாலும்
காதலின்  கணக்குகள்  வேறல்ல...!

கையருகில்   வா....!
என்  கண்களுக்குள்  வாழும்
என்னவளே





Comments

  1. உன்னுடையவள்
    வெகு விரைவில்
    நிச்சயம் வருவாள்

    ReplyDelete
  2. So who inspired you to write this beautiful poem ????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உழைப்பு

நீ இல்லாது

காதல்