ஒரு கோடைக்காலத்து வனவாசம்
வீடு வந்தவுடன்
iPad தேடும் மகன் இல்லை
பனிரெண்டு மணிவரை
விளையாட அழைக்கின்ற மகனும் இல்லை
காலாற நடை நடந்து காய்கறி வாங்கவும்
முக்காலி ஏறி மின்விசிறி துடைக்கவும்
அதிகாலை பாக்கட் பால் வாங்கவும் அவசியமில்லை
மின்சார பில்லை ஈ பைவ் ஆண்டியும்
காஸ் சிலிண்டரை கிருஷ்ணா அம்மாவும்
பார்த்துக்கொள்வார்கள்
தினமும் ஒரு சினிமா,
எட்டு வரை தூக்கம் ,
தஞ்சாவூர் மெஸ் சாப்பாடு ,
இரண்டு நாளுக்கொருமுறை பீர்,
கேள்வி கேட்க ஆளில்லா வாழ்வென
இனிமையாய் இருக்கலாம் கோடை
அறுநூறு சதுர அடி காலி வீட்டினில்
வழி பார்த்து ஏங்கி நிற்கும் புன்னகையும்
கழுத்தைக்கட்டியுருளும் குழந்தைகளும்
நேற்றுவரை நிறைந்திருந்த முத்தச்சுவையுமின்றி
நினைவுகளின் வாசனையில்
வாழ்வதென்ன கொடுமை
நான்காண்டுகளுக்கு முந்தைய கடிதங்களை வாசித்தும்
பட்டுப்புடவை சுடிதார்களை சரிவர அடுக்கியும்
நன்றாய் நினைவிருக்கிற நீல நிற நைட்டியை துவைத்து உணர்த்தியுமாய்
மோட்சமடைகிறதென் பொழுது
உள்மனதில் ஊற்றெடுத்து உணர்வுகளால்
ReplyDeleteபெருக்கெடுத்த வார்த்தை விளையாட்டில்
வாலிபனாய் வலையேற்றும் - என் குமரன்
தொட்டிடுக வானத்தை !!!
களைப்பேதும் வராமல் காகிதத்தில்
நீ செதுக்க நான் வணங்கும்
வாலையவள் துணை வருவாள்
எந்நாளும் !!!
-கிமூ-
Nanri
ReplyDelete